இந்திய தேசிய கீதத்திற்கு இசையமைத்த அமெரிக்க ராணுவத்தினர்.!!

இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் கட்டாயமாக இந்தியா மற்றும் அமெரிக்கா ராணுவ வீரர்களுக்கு இடையே “யுத்த அப்யாஸ்” என்ற போர் ஒத்துகை பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான (2019) போர் ஒத்திகை பயிற்சி வாஷிங்டனில்  உள்ள லூயிஸ் தளத்தில் நடைபெற்றது.

Image result for US military played music to the Indian national anthem.

இந்த பயிற்சியில்  இந்திய மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஒன்றாக இணைந்து, துப்பாக்கிச் சூடு, பீரங்கி மற்றும் போர் விமானங்களை எப்படி கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போர் பயிற்சியில் ஈடுபட்டனர். இரு நாடுகளும் இந்த பயிற்சியினை கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடித்தது.

Image result for US military played music to the Indian national anthem.

இதையடுத்து பயிற்சி முடிந்தபின் அமெரிக்க ராணுவவீரர்கள் இந்திய தேசிய கீதத்திற்கு சிறப்பாக இசையமைத்து, பயிற்சிக்கு சென்ற இந்திய  ராணுவ வீரர்களை கவுரவித்தனர். இந்திய தேசிய கீதத்திற்கு அமெரிக்க ராணுவத்தினர் சிறப்பாக இசையமைத்தது பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.