“அமெரிக்கா , ஈராக் இணைந்து அதிரடி” 18 IS பயங்கரவாதிகள் பலி …!!

அமெரிக்கா மற்றும் ஈராக் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 IS பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஈராக் நாட்டின் அன்பர் பாலைவனம் அண்டை நாடுகளான சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா எல்லை பகுதியை ஒட்டி உள்ளது. இங்கு  IS பயங்கரவாத அமைப்பு மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. இங்குள்ள பொதுமக்கள் கடத்துவது , கொலை செய்வது என தொடர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2017_ஆம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் உள்ள IS தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிவக்கையை ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி

இந்நிலையில் மீதமுள்ள IS பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஈராக் , அமெரிக்க பாதுகாப்பு படை படைகள் முடிவு செய்தனர். இதை தொடர்ந்து அங்குள்ள ஆகாஷத் பகுதியில் IS பயங்கரவாதிகளின் பதுங்கு குழி மீது வான்வழி தாக்குதல், சிரியாவின் எல்லையின் கிழக்கு பகுதியில் மேற்கொண்ட வான்வழி தாக்குதல், மொசூல் நகரின் மேற்கே ஈராக் படையினர் நடத்திய தாக்குதல் , சுரங்க பகுதியின் மீது நடந்தபட்ட மற்றொரு வான்வழி தாக்குதல் மற்றும் சிரிய எல்லையை ஒட்டிய பாலைவன பகுதியில் வான்வழி தாக்குதல் என தொடரப்பட்ட அதிரடி தாக்குதல் வேட்டையில் 18 IS பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட்னர்.