குஜராத் வன்முறை குறித்த ஆவணப்படம்…. வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்ட கருத்து…!!!

குஜராத் மாநில வன்முறை தொடர்பான ஆவணப்படம் குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினுடைய செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்த சமயத்தில், கடந்த 2002 ஆம் வருடத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்தது. அதில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறை குறித்து லண்டனின் பிரபல செய்தி நிறுவனம், “இந்தியா: தி  மோடி கொஸ்டின்” என்னும் தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.

அதற்கு, இந்தியாவின் தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது இது தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தெரிவித்ததாவது, “நீங்கள் குறிப்பிடும் அந்த ஆவணப்படம் குறித்து எனக்கு தெரியாது. எனினும் நான் தெளிவாக கூறுவேன்.

இந்தியாவுடன் நாம் கொண்டிருக்கும் உலகளாவிய மூலோபாயக் கூட்டணிக்கு அடிப்படையாக பல விஷயங்கள் இருக்கின்றன. அமெரிக்கா மற்றும் இந்திய நாட்டிற்கிடையே நெருக்கமான அரசியல் உறவுகள் இருக்கிறது. பொருளாதார உறவுகளும் இருக்கின்றது. மேலும் இரண்டு நாட்டு மக்களுக்கிடையே ஒற்றுமை இருக்கிறது. அமெரிக்கா மற்றும் இந்திய ஜனநாயகத்திற்கு இடையே இருக்கும் பொது மதிப்புகளை நாம் பகிர்ந்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.