ரூ.37,06,12,50,00,000 ஒதுக்கீடு….. வீரியமாக செயல்படும் அமெரிக்கா ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. உலக பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கக்கூடிய அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்காமல் தும்சம் செய்துள்ளது. அங்குள்ள 3,536 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வெள்ளைமாளிகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா ? என்ற பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு தொற்று இல்ல. அமெரிக்கா அரசு தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தி கொரோனாவுக்கு எதிராக வீரியமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தியாளரை சந்தித்த டிரம்ப் , முடிந்த வரை அனைவரும் வீட்டிலேயே இருந்து பணிகளை மேற்கொள்ளுங்கள் ,  மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளிப்படிப்பை மேற்கொள்ளுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்டவர்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். விடுதி , உணவகங்களில் மக்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எல்லோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை ஒன்றிணைந்து செயல்படுத்தினால் நாம் அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனவை கட்டுப்படுத்த அரசு சார்பில் 50 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இந்திய ரூபாயின் மதிப்புக்கு 3லட்சத்து , 70 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.