கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற யுபிஎஸ் முதல் நிலை தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகளை தேர்வர்கள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என UPSC தெரிவித்துள்ளது. மேலும் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் மெயின் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என UPSC தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி மெயின் தேர்விற்கான விண்ணப்ப பதிவு தேதி உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.