UPSC தேர்வில் திடீர் குழப்பம்! ஒரே பதிவு எண்ணில் 2 பெண்கள் தேர்ச்சி!

யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பதவிக்கு இரண்டு இளம் பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆயிஷா பாத்திமா. அதே மாநிலத்தில் மற்றொரு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆயிஷா மக்ரான். இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வை எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் இதில் ஆயிஷா பாத்திமாவும் ஆயிஷா மக்ரானையும் ஒரே பதிவு என்னுடன் ஒரே ரேங்கில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு பெண்களுக்கும் ஒரே எண், ஒரே முன் பெயர், ஒரே ரேங்க் இருக்கும் பட்சத்தில் அந்த 184 ஆவது ரேங்க் யாருக்கு சொந்தமானது என்ற கேள்வி எழுந்து வருகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்களும் தங்களின் அட்மிட் கார்டுடன் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தீவிர ஆவண சரிபார்ப்புக்கு பிறகு 184 ஆவது ரேங்க் ஆயிஷா பாத்திமாவுக்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டது. இது போன்ற தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என யுபிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply