கமலின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் ஆடிய ஜீவா – ரன்வீர்

’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சியில் முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்த ரன்வீர் சிங், நடிகர் ஜீவாவுடன் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவை மேடையில் வெளிப்படுத்தினார்.

 உலகநாயகன் கமலுக்கு மரியாதை செலுத்தும்விதமாக அவரது ஃபேவரிட் நடன அசைவுகளை நடிகர் ஜீவா, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைந்து ஆடியுள்ளனர். ’83’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க படத்தின் நாயகன் ரன்வீர் சிங் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் வந்திருந்தனர்.

83 first look launch

1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்ற கதையை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகியுள்ளது. படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

83 first look launch

இந்தப் படத்தின் தமிழ் பதிப்பை உலகநாயகன் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். இதையடுத்து கமல்ஹாசன், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

83 first look launch

முதல்முறையாக சென்னைக்கு வருகைதந்துள்ள ரன்வீர் சிங், இந்த நிகழ்ச்சியில் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். இதைத்தொடர்ந்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

படத்தில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த ஸ்ரீகாந்த் கேரக்டரில் நடிகர் ஜீவா நடித்துள்ளார். இவரது லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியின்போது நடிகர் ஜீவா, ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்து கமல்ஹாசனின் ஃபேவரிட் நடன அசைவுகளை ஆடி கலகலப்பூட்டினர்.

ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் படத்தில் இடம்பெறும் ‘கச்சேரி கள கட்டுதடி’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து நடனமாடி கிளாப்ஸ்களை அள்ளினர். அப்போது திடீரென கமலின் டிரேட்மார்க் நடன அசைவை வெளிப்படுத்தினர். பின்னர் படத்தின் நடித்த அனைத்து நடிகர்களும் மேடை ஏறி செமயான குத்தாட்டம் போட்டனர். கபிர் கான் இயக்கியிருக்கும் ’83’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *