“நீட் தேர்வு இரத்து” விவசாயிகளுக்கு தனி அமைச்சகம்….. அசத்தும் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை…!!

காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.  

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை  தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

அதில் உள்ள சில அம்சங்கள் :

 

நியாய் எனப்படும் குறைந்தபட்ச வருவாய் மூலம் ஆண்டுக்கு 72 ஆயிரம் வழங்கப்படும்.

நியாய் இத்திட்டத்தால் நாட்டில் உள்ள 20 சதவீத ஏழை குடும்பங்கள் பயனடையும்.

பணமதிப்பிழப்பு திட்டத்தின் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் நியாய திட்டம் இருக்கும்.

கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

புதிய தொழில் தொடங்க மூன்றாண்டுகளுக்கு இந்த அனுமதி பெறத் தேவையில்லை.

2030-ம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.

பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விவசாய கடன்களை திருப்பி செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படும் .

மகாத்மாகாந்தி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும் .

நீட் தேர்வு க்கான பட முடிவு

நீட் தேர்வுமுறையை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த தேர்வு முறையை ரத்து செய்யப்படும் .

தற்போது அமுலில் இருக்கும் ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு ஒரே சதவிகிதம்  அளவில் இருக்கும் .

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கை உடனான மீனவர் பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் .

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

தென்னிந்தியமக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன்.

ரபேல் போர் விமானம் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும்.

பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.