தேவையற்ற பயணம் யாருக்கும் உதவாது – மோடி ட்வீட்

தேவையற்ற பயணங்கள் யாருக்கும் உதவாது என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸை தடுப்பதற்காக பிரதமர் மோடி பொதுமக்கள் அனைவரும்  நாளை சுய ஊரடங்கை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கான ஆயத்த பணியில் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில அரசுகள் ஈடுபட்டிருக்கின்றனர். மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தபட்டுள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவ்டிக்கைக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதை மக்கள் பொழுது போக்கிற்கு செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள சுற்றுலா தளங்கள் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ,  சுய ஊரடங்கான நாளைய தேவையற்ற பயணங்கள் உங்களுக்கும் , யாருக்கும் உதவாது. வீட்டில் இருப்பது மட்டும் முக்கியமல்ல, வெளியூர் செல்லாமல் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருப்பது பகுதியிலே இருப்பது முக்கியம். கொரோனா குறித்து பீதி அடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

மருத்துவர்களின் அறிவுரை கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. தனிமைப் படுத்திக் கொள்வது, அறிவுரை கடைபிடித்தல் முக்கியமானது.மருத்துவர் அறிவுரைப்படி தனிமைப் படுத்திக் கொள்வது குடும்பத்தையும் நண்பர்களையும் பாதுகாக்கும் என்று ட்வீட் செய்துள்ளார்.