நம்ம வீட்டு பிள்ளை படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் வெளியீடு…!!!

நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தின் “உன்கூடவே பொறக்கனும்” பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடிகர் சிவகார்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான எங்க அண்ண பாடல் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது “உன்கூடவே பொறக்கனும்” என்ற பாடலை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஜிகேபி வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் வெளிவந்துள்ள இப்பாடல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.