ஐயோ அவங்க பாத்துட்டாங்க…. ரோட்டில் வீசி சென்ற பணம்… அடித்து பிடித்து ஓடிய மர்ம நபர்கள்…!!

வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தை அதிகாரிகளை பார்த்ததும் மர்ம நபர்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கு கருவேப்பிலைபாளையம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி கண்காணிப்பு குழு அலுவலரும், உளுந்தூர்பேட்டை துணை தாசில்தாருமான அந்தோணிராஜ் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த சில மர்ம நபர்கள் அதிகாரிகளை பார்த்ததும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கீழே வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினரிடம் அதிகாரிகள் கைப்பற்றிய பணத்தை ஒப்படைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.