பிரிட்டனில் Universal credit திட்டம் ரத்து.. வறுமையில் வாடும் குடும்பங்கள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தை ரத்து செய்ததால் நாட்டின்  முக்கிய தொகுதிகளில் இருக்கும் குடும்பங்களின் வருமானத்தில் 500 மில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் யுனிவர்சல் கிரெடிட் திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்கள் வாரந்தோறும் 20 பவுண்டுகள் ஊக்கத்தொகையாக பெற்று வந்தது. ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது இத்திட்டத்தை ரத்து செய்துவிட்டார். இதனால் பல ஏழை குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் நாட்டில் அதிகம் பாதிப்படையும் பகுதி எது? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாக இருந்து, கடந்த 2019 ஆம் வருடத்தில், போரிஸ் ஜான்சன் கட்சிக்கு ஆதரவு தெரிவித்த 54 தொகுதிகள் தான் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

இந்த 54 தொகுதிகளில் இருக்கும் 3,40,000 குழந்தைகள் உட்பட 5,01, 370 குடும்பங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது என்று தெரியவந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் குறைவான சம்பளம் பெற்று வரும் இப்பகுதியில் இருக்கும் 2 லட்சம் நபர்கள், ஆயிரம் பவுண்டுகளுக்கு மேல் வருமானத்தை இழக்கிறார்கள்.

பிரதமர் இறக்கம் இல்லாமல் இவ்வாறு அதிரடி முடிவை எடுத்தால், பல மில்லியன் குடும்பங்கள் வறுமை நிலைக்கு தள்ளப்படும் என்று பொருளாதார நிபுணர்களும், தொண்டு நிறுவனங்களும்  முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் பல குடும்பங்கள் தினந்தோரும் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பால் மேலும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *