#UnionBudget2023: மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்காதது வேதனை: முதல்வர் ஸ்டாலின்!!

இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சரின் கருத்து வெளியாகி இருக்கிறது. முதலமைச்சருடைய அறிக்கை வெளியாகி இருக்கிறது.  ஒன்றிய பட்ஜெட்  ஏமாற்றம் அளிக்கக்கூடிய பட்ஜெட் என முதலமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை மட்டும் குறி வைத்து வளர்ச்சி திட்டங்கள், நிதி உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி விதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஒரு சாராருக்கு மட்டுமே பலன் அளிக்கும். பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கும் ஆனது என்பதிலிருந்து ஒன்றிய அரசு முற்றிலும் விலகிச் செல்வதை இந்த பட்ஜெட் காட்டுகிறது. தமிழ்நாட்டுக்கு புதிய திட்டம் எதையுமே அழிக்காத ஒன்றிய அரசு பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றம் அளிக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பது வேதனை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.