நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் 2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார. தற்போதைய மோடியை தலைமைதான அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது.பட்ஜெட் உரையில் பேசிய நிதி அமைச்சர்,
9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்திய பொருளாதாரம் பத்தாவது இடத்திலிருந்து, ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டி வருவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கின்றேன். கொரோனா காலத்தில் யாரும் பசியில் இருந்து விடக்கூடாது என்பதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த பின்பு 9 கோடி புதிய சமையல் எரிவாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த ஓராண்டுக்கு 80 கோடி குடும்பங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படும். ஜி 20 நாடுகளும் தலைமை பொறுப்பு இந்தியா ஏற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
நடப்பாடு பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும். மற்ற நாடுகளை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகம். நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ கல்லூரிகளுக்கு அருகில் புதிய நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் எனவும் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.