#UnionBudget2023: முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ.30 லட்சமாக உயர்வு!!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகின்றார். அதில், பெண்கள் 7.5 சதவீதம் வட்டி விதத்தில் இரண்டு லட்சம் ரூபாய் வரை சேமிப்பதற்கான புதிய சிறுசேமிப்பு திட்டம் தொடங்கப்படும். அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு 15 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு.  10 ஆயிரம் கோடி முதலீட்டில் பசு மற்றும் அது சார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.