மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தங்க கட்டிகளில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்த்தது போலவே உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 43,320 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராமுக்கு 55 உயர்ந்து ரூபாய் 5,415க்கு விற்பனை ஆகிறது. இன்று மட்டும் ஒரு கிராம் 77 ரூபாய் உயர்ந்துள்ளது. காலையில் கிராமுக்கு 22 எனவும், மதியம் கிராமுக்கு 55 எனவும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூபாய் 1.20 விலை அதிகரித்து 76 விற்பனை ஆகிறது.