”11,52,000 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி” மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக பாஜக அரசு வழங்கி வருகிறது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.