“மத்திய அரசின் திட்டத்தில் தமிழாக்கம்” கனிமொழி MP கேள்வி …!!

 மத்திய அரசின் திட்டம் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளதை எப்படி மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று மக்களவையில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் “பிரதம மந்திரி” என்று அடங்கிய பெயர்களை  வைத்து திட்டங்களை செயல்படுத்துகின்றது. இது குறித்து இன்று நடைபெற்ற மக்களவையில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பினர்.

Image result for கனிமொழி MP

அப்போது அவர் கூறுகையில் , எல்லா திட்டங்களுக்கும் இந்தியிலேயே மத்திய அரசு பெயர் வைக்கிறது. தூத்துக்குடியில் ‘PM Sadak Yojana’ என ஒரு பெயர்ப்பலகையில் தமிழாக்கம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. அதை எப்படி கிராமத்து மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.