ஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..!!

அனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன.

Image result for காஞ்சிபுரம் வெடிவிபத்து

இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன் இரண்டு இளைஞர்கள் அப்பகுதியில் இருந்து சில இரும்பு வெடிமருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு அனுமந்தபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடைக்கு எடுத்துச் சென்ற நிலையில்,

Image result for காஞ்சிபுரம் வெடிவிபத்து

தூக்கி செல்லும் வழியிலேயே வெடி குண்டு வெடித்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதையடுத்து அனுமந்தபுர மலை பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறலாம் தடுக்க கேட்பார் அற்று கிடைக்கும் வெடிமருந்து பாகங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *