உங்ககிட்ட கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… இனி கவலையை விடுங்க….. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!!

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெறும் வசதியை ரிசர்வ் வங்கி வழங்கி இருக்கிறது. டேப் ஒட்டப்பட்ட, சேதமடைந்த (அ) மிகவும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி புது நோட்டுக்களை பெற இந்திய ரிசர்வ் வங்கியானது சில விதிகளை வகுத்துள்ளது. அதன்படி பழைய மற்றும் கிழிந்த நோட்டுகளை ஈஸியாக மாற்ற இயலும் எனவும் இதற்காக வங்கி உங்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

அதே நேரம் நீங்கள் மாற்றக்கூடிய ரூபாய் நோட்டுக்கள் மோசமாக எரிந்திருந்தால் (அ) பல துண்டுகளாக உடைந்திருந்தால் அத்தகைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதோடு சேதமடைந்த நோட்டுக்களை மாற்ற ரிசர்வ் வங்கியானது சில வழிமுறைகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு நபர் ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20 நோட்டுகளை மாற்றலாம். எனினும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.5,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.