உங்கக்கிட்ட பெட்ரோல் கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் எரிப்பொருளுக்காக அதிகம் செலவு செய்தால், எரிப்பொருள் கிரெடிட் கார்டு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது தவிர்த்து மற்றவகை ஷாப்பிங்கிலும் வெகுமதி புள்ளிகளானது கிடைக்கும். பெட்ரோல்-டீசல் வாங்ககையில் ​​எரிப்பொருளுக்கான கிரெடிட் கார்டின் வாயிலாக கூடுதல் நன்மைகளை பெறலாம். இந்தியன் ஆயில் சிட்டி கிரெடிட் கார்டு வாயிலாக உணவகங்களில் 15 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

இதற்கிடையில் நீங்கள் எரிப்பொருள் கிரெடிட் கார்டைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த கார்டின் வாயிலாக பெட்ரோல், டீசல் பெறுவது ஈஸியாகிறது. இப்போது பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்கு மேல் இருக்கிறது. இத்தகைய நிலையில் எரிப்பொருள் அட்டை வைத்திருப்போர் பெரிதும் பயனடைவார்கள்.

வங்கிகள் (அல்லது) கடன் அட்டை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான அட்டைகளை வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் விலையை அடிப்படையாக கொண்டது ஆகும். எரிப்பொருள் கிரெடிட் கார்டு வாயிலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சேமிக்கலாம். அதோடு எரிப்பொருள் வாங்கையில் கூடுதல் வெகுமதி புள்ளிகள் (அ) கேஷ்பேக்கைப் பெறலாம்.