“மாற்றமின்றி பெட்ரோல் டீசல்” வாடிக்கையாளர்கள் நிம்மதி….!!

தேர்தல் முடிந்த நிலையில்  தொடர்ந்து உயர்ந்து கொண்டு வந்த பெட்ரோல் இன்று மாற்றமின்றி இருந்ததால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

Image result for petrol diesel

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி 74 ரூபாய் 59 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலை நேற்றைய விலையில் எவ்வித மாற்றமுமின்றி   70 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்த நாள் முதல் விலை கிடுகிடுவென உயர்ந்த பெட்ரோல் இன்று மாற்றமில்லாமல் நிலையாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனனர்.