“மாற்றமின்றி பெட்ரோல்” 7 நாட்களுக்கு பின் உயர்கின்றது டீசல்…… இன்றைய விலை நிலவரம்…!!

இரண்டாவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை இருக்கும் பட்சத்தில்  7 நாட்களுக்கு பின் டீசல் விலை உயரத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.

இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி  73 ரூபாய் 88 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையும்  நேற்றைய விலையில் இருந்து 5 பைசா உயர்ந்து  69 ரூபாய் 66 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 6 வது நாளாக குறைந்து கொண்டு வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெட்ரோல் இரண்டாவது நாளாக மாற்றமின்றியும் , டீசல் 7 நாட்களுக்கு பின் இன்று உயர்ந்தும் காணப்படுகின்றது.