நடிகர் உமாபதி ராமையா இரண்டு கதாநாயகிகளுடன் தேவதாஸ் படத்தில் நடிதுள்ளார்.
‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ போன்ற படங்களையடுத்து தொடர்ந்து உமாபதி ராமையா – யோகி பாபுவுடன் சேர்ந்து நடித்துள்ள படம் தேவதாஸ். இயக்குனர் இரா மகேஷ் இயக்கத்தில் உமாபதி ராமையா யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் உமாபதி ராமையா இரண்டு கத நாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் யோகிபாபு படம் முழுவதும் நகைச்சுவை நாயகனாக வலம் வருகிறார். மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் உமாபதியோடு இணைகின்றனர்.

இப்படத்தின் கதை என்னவென்றால் ஒரு சாதாரண மனிதனின் வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டுமே வந்து செல்லும், ஆனால் அளவில்லா இன்பமும் துன்பமும் ஒரே நேரத்தில் வருவதால் ஏற்படும் விளைவை இப்படம் எடுத்து கூறுகிறது. இப்படத்தை பார்க்கும் போது பார்க்கும் மனிதரின் வாழ்வில் நடந்த இன்ப,துன்பங்களை நினைவு படுத்துவதாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.