டீ , காபி யை நிறுத்திட்டு இதை குடிங்க ….

உளுந்து கஞ்சி

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 50 கிராம்

நெய் –  சிறிது

முந்திரி –  5

உலர் திராட்சை -5

தேங்காய் பால் – 1/4 கப்

நாட்டுச்சர்க்கரை –  2 ஸ்பூன்

ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்

உப்பு -சிறிது

 

ulunthu kanjiக்கான பட முடிவுகள்

செய்முறை :

முதலில் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட்டு அரைத்துக்கொள்ள வேண்டும் . பின் கடாயில் நெய் சேர்த்து முந்திரி , உலர்திராட்சை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் கடாயில் அரைத்த உளுந்தம்பருப்பு , தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஏலக்காய் தூள் , உப்பு ,நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி தேங்காய்ப்பால் ,முந்திரி , திராட்சை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான உளுந்து கஞ்சி தயார் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *