உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் …. மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விலகல் ….!!!

காயம் காரணமாக  உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விலகி உள்ளார் .

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு  கடந்த ஜூன் மாதத்தில்  ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை  நார்வேயில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் என கூறியுள்ளார் இது குறித்து அவர் கூறும்போது, “முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு சரிப்படுத்துவதற்காக உடற்பயிற்சியை 6 வாரம் மேற்கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டியில் நான் பங்கேற்கப் போவதில்லை “என்று அவர் கூறினார். மேலும் பேசிய அவர் “இந்த ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியை தவிர வேறு முக்கியமான போட்டிகள் இல்லை . அத்துடன் மற்ற போட்டிகளில் பங்கேற்கும் எண்ணமும் எனக்கு கிடையாது .டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நான் வலியுடன் பங்கேற்று தான் பதக்கத்தை வென்றேன் “என்று அவர் கூறினார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *