உலக ஆடவர் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ….!!!

உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடந்த இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . 

ஏ.பி.டி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்விடேவு, 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர்.

இதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் . அதோடு உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *