எட்டு நவீன ரக டாங்கிகள்…. உக்ரைனுக்கு அனுப்பிய நார்வே அரசு….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்கரனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன. மேலும் ரஷ்யாவுக்கு எதிராக போரிட தேவையான ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளையும் உக்ரைனுக்கு அந்நாடுகள் வழங்கி வருகின்றது.

இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போரிடுவதற்கு தேவையான ஆயுதங்களை வழங்குமாறு உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற ஜெர்மனி, போலந்து, போர்ச்சுக்கல், நார்வே உள்ளிட்ட நோட்டா நாடுகள் 48 டாங்கிகளை வழங்குவதாக உறுதியளித்திருந்தது. அதன் பேரில் தற்போது ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட எட்டு லியோபர்டு ரக டாங்கிகளை நார்வே அரசு உக்கரனுக்கு வழங்கியுள்ளது. இதனோடு வெடி மருந்துகள், டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் போன்றவையும் விமான மூலம் நார்வே அரசு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.