“கைது வாரண்ட்” கோபமடைந்த புதின்…. தாக்குதலை தீவிரபடுத்திய ரஷ்ய படைகளால்…. உக்ரைனில் பரபரப்பு….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்ததோடு அந்நாட்டிற்கு தேவையான ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளையும் செய்து வருகின்றது. இதனால் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக இந்தப் போரினால் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் உக்ரைனில் உள்ள குழந்தைகள் ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய போர் குற்றம் ஆகும். இதற்காக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா லவோவா பெலோவா ஆகியோருக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பு உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் தலைநகரான கியூ மற்றும் லீவிவ் மாகாணங்கள் மீது நேற்று முன்தினம் இரவில் நேரத்தில் 16 ரஷ்ய ட்ரோன்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அந்த 16 ட்ரோன்களில் 11 ட்ரோன்கள் உக்ரைன் விமான படையால் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் இராணுவத்தின் தினசரி அறிக்கையில் கூறி இருப்பதாவது “கடந்த 24 மணி நேரத்தில் 34 வான்வழி தாக்குதல் ஒரு ஏவுகணை தாக்குதல் மற்றும் 57 விமான எதிர்ப்பு தாக்குதலை ரஷ்யப்படைகள் நடத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கெர்சன் மாகாணத்தில் 7 குடியிருப்பு வீடுகள், மழலையர் பள்ளி மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply