திடீரென உக்ரைன் விரைந்த ஜப்பான் பிரதமர்…. அதிபர் ஜெலென்ஸ்கியிடம் வாக்குறுதி…!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது. இதனால் இப்போர் நின்று விடாமல் தொடர்ந்து நீடித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் அந்நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ஆனால் இதனை ரஷ்யா கண்டு கொள்ளாமல் போரில் முன்னேறி செல்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் போருக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திடீரென உக்ரைன் தலைவர் கீவ் விரைந்தார். அங்கு புச்சா நகர் பகுதியில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து போர் நிலவரம் குறித்தும், இருதரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். அது மட்டுமல்லாமல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் ஜப்பான் பிரதமர் “ஜப்பான் மற்றும் ஜி7 நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு தரும்” என வாக்குறுதி கொடுத்தார்.