ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு UGC NET (டிசம்பர் 2023) விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களும் ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. UGC NET தேர்வுகள் டிசம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.