“இளைஞரணி செயலாளரானார் உதயநிதி” ஸ்டாலினுடன் வாழ்த்து…

இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில்  திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது  திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை தற்போது தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Image result for udhayanidhi stalin

இந்நிலையில் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் இருக்கக்கூடிய  அவரது இல்லத்தில்  ஸ்டாலினை நேரில்  சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இன்னும் சற்று நேரத்தில்  அண்ணா அறிவாலயம் செல்ல இருக்கும் இவரை வரவேற்க திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ,தொண்டர்கள் என பலரும்  குவிந்த வண்ணம் உள்ளனர்.