உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் – திமுக எம்.பி ஆருடம் ..!!

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் எம்.பி கவுதவ சிகாமணி பேசினார். அப்போது வெகு விரைவில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என ஆருடம் தெரிவித்து இருக்கிறார். மேலும் பேசிய அவர்,  அனைத்து பகுதி மக்களுக்கும்,  அனைத்து சாரார் மக்களுக்கும் சென்று சேரும் வகையில் இந்த கூட்டத்தின் வாயிலாக ரசிகர் மன்றத்தின் கூட்டத்தின் வாயிலாக நான் நம்முடைய தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையாக இதை வைக்கின்றேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து இந்த கோரிக்கையை வைக்க கடமைப்பட்டிருக்கிறோம். கூடிய விரைவில் எங்கள் தளபதி அவர்களை துணை முதல்வராக அமரவையுங்கள். தமிழகமே அவருக்கு பின்னால் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இனிமே வரப் போகிற அத்தனை தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவார் என்று இந்த நேரத்திலே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என எம்.பி பேசியுள்ளார்.