கனா பட இயக்குனருடன் இணையும் உதயநிதி…. வெளியான முக்கிய அப்டேட்….!!

அருண்ராஜா காமராஜ் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்வுபூர்வமாக தெரிவித்திருந்தார்கள்.

மேலும், இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அருண்ராஜா காமராஜ் இயக்கும் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதன்படி, ஹிந்தியில் வெற்றி பெற்ற ஆர்டிகள் 15 என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார். உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 16-ஆம் தேதி வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *