“ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார்” கே.எஸ்.அழகிரி வாழ்த்து …!!

திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் உதயநிதி செயலாளராக அறிவிக்கப்பட்டத்தை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில் , திமுக தலைவர் ஸ்டாலினை போன்று உதயநிதியும் செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.