சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்..!!

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.  

சென்னையில் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23)  கடந்த 12ம் தேதி  பள்ளிக்கரணை வழியாக  ஸ்கூட்டரில்  சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில்  கீழே விழுந்தார். பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைக்க மாட்டோம் என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்தியுள்ளது.

Image

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை  குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் வீட்டுக்கு சென்று இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோரான தந்தை ரவி, தாய் கீதா ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேனர் வைப்பவர்கள் மீது கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தொடர்ந்து மின் விபத்து மரணங்கள், மக்களின் பாதுகாப்பற்ற அரசாக தமிழக அரசு இருப்பதாகவும் விமர்சித்தார்.