உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் அன்று 2 கிலோ தக்காளி இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28-ம் தேதி தி.மு.க இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் ஈ.சி.ஆர் சாலை சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் ஒவ்வொரு நபருக்கும் 2 கிலோ இலவச தக்காளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தக்காளி அதிக விலைக்கு விற்கப்படுவதால் இலவசமாக கிடைக்கிறது என பொதுமக்களும், நரிக்குறவர்களும் அங்கு திரண்டனர்.
இதில் இலவச தக்காளி வழங்குவதற்கான ஏற்பாட்டை உதயநிதி ரசிகர் மன்ற ஒன்றிய தலைவர் மோகன் செய்திருந்தார். மேலும் சமூக வலைத்தளம் மூலம் பிரபலமடைந்த நரிக்குறவர் பெண் அஸ்வினி இலவச தக்காளி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு வந்திருந்த பொதுமக்களும் நரிக்குறவர்களும் போட்டி போட்டுக்கொண்டு தக்காளி வண்டி அருகில் சென்று மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.