உதயநிதி ஒரு செங்கல் திருடன்.. விரைவில் தே.மு.தி.க-வின் வெற்றியை காண்பீர்கள்…? பிரேமலதா பேட்டி…!!!!!

தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா தனது பிறந்தநாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடர் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு நிலையில் இருக்கிறது. அதற்கு மதுபான கடைகள் மற்றும் போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பே  காரணம் இந்திய நாடு கலாச்சாரமான நாடு தற்போதைய  சூழ்நிலையில் அவை கேள்விக்குறியாகி வருகிறது. ஆட்சியர்கள் இரும்பு கருத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் செங்கல் திருடன் என விமர்சித்தது போல எடப்பாடி பழனிச்சாமி மீது திருட்டு விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.

இது போன்ற விமர்சனங்கள் அவர்களது தரத்தை தாழ்த்தி கொள்கிறது. முதலில் வழக்கு தொடுப்பதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும். முகாந்திரம் இல்லாமல் வழக்கு தொடுப்பதற்கான காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதல்வர் என அமைச்சர்கள் கூறிவரும் கருத்துக்கு அந்த கட்சியினர் தான் முடிவெடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் தே.மு.தி.கவிற்கு குறைந்திருப்பதாக கூறும் கருத்து முதலாவது தவறு. வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி வெற்றி பெறுவது ஒரு வெற்றியா தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் தான்.

இந்த இடைத்தேர்தல் வெற்றியின் மூலமாக வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்க முடியாது. அடுத்த தேர்தலில் தே.மு.தி.க தங்களது வாக்கு பலத்தை வெளிப்படுத்தும். அரசியலில் மேலே இருப்பவர்கள் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே போவதும் நடக்க கூடியது தான். தேமுதிகவின் விஸ்வரூப வெற்றியை விரைவில் காணப் போகின்றீர்கள் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் அண்ணாமலை பதவி விலகுவது பற்றிய கருத்துக்கு அண்ணாமலை தான் பதிலளிக்க வேண்டும். தேமுதிகவினர் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என பிரேமலதா கூறியுள்ளார்.

Leave a Reply