திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி…. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு …!!

திமுக_வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் திமுக_விற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். திமுக தலைவர் முக.ஸ்டாலினின் மகனும் , முரசொலியில் நிர்வாக இயக்குனராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக திமுகவில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய  இளைஞரணி திமுக_வில் உள்ள முக்கியமான அணியாக பார்க்கப்படுகின்றது.திமுகவில் 200க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன அதில் முக்கியமான அணியாக இளைஞரணி திகழ்கின்றது. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அதிகார பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.