கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “உபா சட்ட திருத்த மசோதா” மாநிலங்களவையில் நிறைவேறியது..!!

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உபா சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. 

மத்திய அரசு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனையை வலுப்படுத்த  சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர  முடிவு செய்தது. இதனையடுத்து இந்த உபா சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது காங்கிரஸ் உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை  தெரிவித்தனர். ஆனால் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Image

இதையடுத்து, மாநிலங்களவையில் உபா சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் கடும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் கடுமையான  எதிர்ப்பை  தெரிவித்தார்.  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாவை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Image

இதையடுத்து, மசோதாவுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவானது. இதனால் இந்த  மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனி நபரை தீவிரவாதி என அறிவித்து அவர் மீது கடும் தண்டைனை வழங்க வழி வகுக்கிறது.