ராசியின் வகைகள்….!!

ராசியின் வகைகளை பார்க்கலாம்

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள ராசியை தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது.

கடந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் உருவங்கள் என்ன என்பது குறித்து பார்த்தோம் . இந்த செய்திக்குறிப்பில் நாம் ராசியின் வகைகள் குறித்து காணலாம் :

Image result for rasi

ராசிகளின் வகைகள் :

ஊமை ராசிக , நான்கு கால் ராசி , இரட்டை ராசி ஆகிய 3 வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றது .

ஊமை ராசிகள் :

கடகம்,விருச்சிகம்,மீனம் ஆகிய ராசிகள் ஊமை ராசிகள் ஆகும்.

நான்கு கால் ராசிகள் :

மேஷம்,ரிஷபம்,சிம்மம்,மகரம் ஆகிய ராசிகள் நான்கு கால் ராசிகள் ஆகும்.

இரட்டை ராசிகள் :

மிதுனம்,தனுசு,மீனம் ஆகிய ராசிகள் இரட்டை ராசிகள் ஆகும்.

 

ராசியை   சரம், ஸ்திரம் மற்றும் உபயம் என்ற அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கின்றனர் .

மேஷம், கடகம், துலாம், மகரம் இந்நான்கும் சர ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம் கும்பம் இந்நான்கும் ஸ்திர ராசிகள்
மிதுனம், கன்னி, தனுசு மீனம் இந்நான்கும் உபய ராசிகள்.

ஒற்றை (ஆண்) ராசி, இரட்டை (பெண்) ராசி என்ற அடிப்படையில்இரண்டு வகையாகப் பிரித்திருக்கிறார்கள். அதாவது..

மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இந்த ஆறு ராசிகளும்ஆண் ராசிகள் அல்லது ஒற்றை ராசிகள்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஆறு ராசிகளும்பெண் ராசிகள் அல்லது இரட்டை ராசிகள்.

Image result for rasi

ராசியை  நெருப்பு,  நிலம்,  காற்று,  நீர்  என்ற  அடிப்படையிலும், கிழக்கு,  மேற்கு  வடக்கு  தெற்கு  என்ற அடிப்படையிலும் நான்கு வகையாகபிரித்திருக்கிறார்கள்

மேஷம், சிம்மம், தனுசு இம்மூன்றும் கிழக்கு ராசிகள், நெருப்பு ராசிகள்.
ரிஷபம், கன்னி, மகரம், இம்மூன்றும் தெற்கு ராசிகள், நிலம் ராசிகள்.
மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்றும் மேற்கு ராசிகள், காற்று ராசிகள்.
கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்றும் வடக்கு ராசிகள், நீர் ராசிகள்