தலைதெறிக்க ஓடிய வாலிபர்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரை பார்த்ததும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் கடத்தி விட்டு தப்பி ஓடிய நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் நந்தகுமார் மற்றும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *