நியூ ட்ரிக்… மக்களை வரவழைக்க…அஜித், விஜய் படங்கள்… ஒரே நாளில் ரிலிஸ்…!!

நடிகர் விஜய் மற்றும் அஜீத் நடித்த படங்களில் ஒரே நாளில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்கங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் ஊரடங்கில்  அமல் படுத்தப்பட்ட சில தளர்வுகளின் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு கடந்த நவம்பர் மாதம் முதல் 50 சதவீத இறக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்குவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. ஆனால் திரையரங்குகளில் முன்பிருந்த அளவிற்கு மக்கள் கூட்டம் வருவதில்லை. இதற்கு காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் இதுவரை திரையிடப்படவில்லை.

இதனை தொடர்ந்து திரையரங்கங்களில் மக்கள் கூட்டத்தை மீண்டும் வரவழைக்கும் பொருட்டு கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி முதல் புதுப்பேட்டை மற்றும்ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தையும், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான விஜய் நடித்த தலைவா படத்தையும் ஜனவரி 8ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திரையரங்குகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் இரண்டு பெரிய முன்னணி நடிகர்களின் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *