காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். 

ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர்.

Image result for Two militants abducted and killed two residents of the Travel area of ​​Pulwama district

பின்னர் இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு  பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து டிரால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். இருவரையும் கடத்தி கொலை செய்த தீவிரவாதிகளை பிடிப்பதற்கு  தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின் அங்கு நடக்கும் முதல் தீவிரவாத தாக்குதல் இது என்று சொல்லப்படுகிறது.