அமெரிக்க நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கி 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரசால். இந்த கொடிய வைரசால் இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் இத்தாலி – 3,405 , சீனா- 3,245 , ஈரான் – 1,284 , ஸ்பெயின் – 831 என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. சீனாவை விட தற்போது இத்தாலி அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அமெரிக்காவிலும் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 150ஐ தாண்டிவிட்டது. மேலும் மேலும் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
இதனிடையே அமெரிக்க எம்.பிக்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்நாட்டு நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.U.S. House representatives உறுப்பினர்களான மாரியோ டயஸ் மற்றும் பென் மிக் ஆடம்ஸ் (MarioDiazBalart and BenMcAdams) ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுகின்றனர்.
இதில் மாரியோ டயஸ் என்பவர் புளோரிடா (Florida) மாகாணத்தையும், பென் மிக் ஆடம்ஸ் என்பவர் யூட்டா (Utah) மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இப்போது இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.