மின்னல் தாக்கி 2 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைகுறிச்சி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் வயல் வெளியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் திடீரென மழை பெய்ததால் அங்குள்ள கருவேல மர காட்டுக்குள் புகுந்து விட்டன. மேலும் மணியும் காட்டுப் பகுதியில் நின்று கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் மணி உடனடியாக தனது ஆடுகளை வீட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று பார்த்த போது தனக்கு சொந்தமான இரண்டு ஆடுகள் காணாமல் போனதை அறிந்து மணி அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்த போது மின்னல் தாக்கி 2 ஆடுகள் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி இறந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.