“ஆற்றிற்கு குளிக்க சென்ற இருவர் ” அண்ணன் – தம்பிக்கு நேர்ந்த விபரீதம்…. வேலூரில் நடந்த சோகம்….!!!

ஆற்றில் குளிக்கச் சென்ற அண்ணன் – தம்பி தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள காளியம்மன் தோப்பில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு முபாரக், ஜாகிர் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் பாலாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தினால் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ஜாகிர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் முபாரக் காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் அவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தினால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் வேலூர் காவல்துறை மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய சகோதரர்களை தேடும் பணியில் நீண்ட நேரம் ஈடுபட்டும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாது வேலூரில் பெய்த கனமழை காரணமாக அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என வீரர்கள் கூறுகின்றன. மேலும் இருவரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *