ட்விட்டரில் அஜாஸுக்கு ப்ளூ டிக் இல்லையா ….? கோரிக்கை வைத்த அஸ்வின்….!!!

ஒரே  இன்னிங்சில் 10 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில்  ப்ளூ டிக் வழங்க வேண்டும் என அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில் ,மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது . அதோடு 2  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது .இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்  அஜாஸ் படேல் 10 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமில்லாது டெஸ்ட் கிரிக்கெட்டில்   10 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஜிம் லேகர் இந்தியாவின் அனில் கும்ப்ளே  ஆகியோருக்கு அடுத்த படியாக  3- வது பந்துவீச்சாளராக அஜாஸ் படேல் இடம்பிடித்தார்.

இந்நிலையில் கடந்த 2011 -ஆம் ஆண்டு முதல் ட்விட்டர் தளத்தில் இருந்து வரும் அஜாஸ் படேலை  13,000 பேர் பின் தொடர்கின்றனர் .அதோடு  நியூசிலாந்துக்காக 11 டெஸ்ட் போட்டி மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஜாஸ் படேலுக்கு ட்விட்டரில் ப்ளு டிக் இதுவரை வழங்கப்படவில்லை .இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுகுறித்து கூறுகையில்,” ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய அஜாஸ் படேல்  ட்விட்டரில்  ப்ளூ டிக் அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டியவர் “என  ட்விட்டர் தளத்துக்கு அஸ்வின் கோரிக்கை  வைத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *