பயனாளர்களின் தகவல்களை அனுமதியின்றி வெளியிட்ட ட்விட்டேர்…!!!!

ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளது.

பயனாளர்களின்  விவரங்களை பாதுகாக்கும் செயலில் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சிக்குவது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் தனது வலைத்தள செட்டிங் காரணமாக பிழை ஏற்பட்டு விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ள்து.

Image result for mobile phone info leak

“எங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள்,ஆனால் இங்கு தோற்றுவிட்டோம்,” என்றும் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வதாகவும் இதற்கு தேவையான  அணைத்து நடவடிக்கைகளையும்  விரைவில்  எடுப்பதாக ட்விட்டர் நிறுவனம் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறது.

Image result for mobile phone in hand

வலைதளத்தில் இருந்த பிழைகளை கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், பாதிக்கப்பட்ட நபர்கள்  பற்றி எந்த  தகவலையும்  வழங்கவில்லை.