அய்யயோ….!! “ஐஸ்வர்யா போட்ட மாஸ்டர் பிளான்”…. என்ன தெரியுமா….? ஷாகில் ரசிகர்கள்….!!!

இஸ்வர்யா இணையதளத்தில் தனது பெயரை மாற்றி உள்ளார்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் 18 வருடங்கள் ஆகி கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இதற்குப் பின்னர் இருவரும் அவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஐஸ்வர்யா அண்மையில் தான் இயக்கியிருக்கும் பயணி பாடலை வெளியிட்டு இருந்தார்.

இதுவரை சமூக வலைத்தள பக்கங்களில் தனுஷ் பெயரை நீக்காமல் வைத்திருந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் திடீரென தனுஷின் பெயரை நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விவாகரத்துக்குப் பின்னர் இவ்வளவு நாள் தனுஷின் பெயரை நீக்காமல் வைத்து இருந்த ஐஸ்வர்யா தற்போது நீக்கியதற்கு காரணம் என்ன என்று கேள்வி எழுந்து வருகிறது. அதாவது பிரமுகர்கள், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள் போன்ற முக்கியமான பிரபலங்களுக்கு சமூக வலைத்தள பக்கங்களில் ப்ளூ டிக் வழங்கப்படும்.

இது பிரபலங்களின் உறுதி செய்யப்பட்டதாக பக்கம் என்பதற்கான ஆதாரம். இந்த கணக்கை வைத்திருப்பவர்கள் தங்களது பெயரை மாற்றினாள் ப்ளூ டிக் நீக்கப்படும். இதனால்தான் ஐஸ்வர்யா இவ்வளவு நாளாக பெயரை மாற்றாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் ட்விட்டரின் விதிகளுக்குட்பட்டு தனது பெயரை மாற்றியுள்ளாராம். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தனது பெயரை மாற்றுவார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *